கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதாவது கடந்த 4-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 6, 416 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 15, 710 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 15, 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 92. 58 அடியாக இருந்தது.