சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள பழக்கடை, பூக்கடை மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் இன்று நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் தலைமையில் அகற்றப்பட்டன. மேலும் இனிமேல் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்தனர். புதிய கடைகள் கட்டுவதற்காக பழைய கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.