சேலம் மாவட்டம் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சேலம் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சபர்மதி மேற்பார்வையில் நடந்தது. உதவி ஆணையர் ராஜா, கோவில் செயல் அலுவலர் சுதா, சரக ஆய்வாளர் கல்பனா தத் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் 132 கிராம் தங்கம், 365 கிராம் வெள்ளி மற்றும் ரூ. 42 லட்சத்து 26 ஆயிரத்து 716 ரொக்கம் இருந்தது.