பா. ம. க. சமூக நீதி பேரவை மாவட்ட செயலாளர் பகத்சிங். இவரது கட்சிக்காரரின் வழக்கு சம்பந்தமாக மேச்சேரி போலீஸ் நிலையத்துக்கு கடந்த மாதம் 22-ந் தேதி சென்றார். அப்போது போலீசாரிடம் வாக்குவாதம் ஏற்பட்டு அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அவரை 3 மணி நேரம் போலீஸ் நிலையத்தில் அமர வைத்தனர். இதையடுத்து போலீசாரை கண்டித்து பா. ம. க. சார்பில் மேச்சேரி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் மேற்கு மாவட்ட பா. ம. க. செயலாளர் சதாசிவம் எம். எல். ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜசேகரன், சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்டதலைவர் மாணிக்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகர், மாதப்பன், மாரப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.