மேச்சேரியில் மாரத்தான் போட்டி: 2, 000 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

70பார்த்தது
மேச்சேரியில் மாரத்தான் போட்டி:  2, 000 மாணவ- மாணவிகள் பங்கேற்பு
சேலம் மாவட்டம் மேச்சேரி ராகவேந்திரா கல்வி நிறுவனங்கள், காவேரி கல்வி நிறுவனங்கள், எஸ். எம். கார்ஸ், குஞ்சாண்டியூர் தங்கவேலு ஆர்த்தோ மருத்துவமனை, மேச்சேரி சிட்டி யூனியன் வங்கி ஆகிய அனைத்து குழுமங்களின் பங்கேற்புடன் மாரத்தான் போட்டி மேச்சேரியில் நடைபெற்றது. போட்டி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. பள்ளியின் இணை இயக்குனர் சுகன்ராஜ் வரவேற்றார். 2, 5, 10, கி. மீ. , என்ற பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மேச்சேரி ஒன்றிய தி. மு. க. செயலாளர் சீனிவாச பெருமாள், முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 5 கிலோமீட்டர் பெண்களுக்கான போட்டியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், பவித்ரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி