கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, “கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முதல் நாளிலேயே முறையான காய்ச்சல் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். மேலும், அதற்கான பொருத்தமான ஆண்டிபயாடிக் அல்லது வைரஸ் எதிர்ப்புக்கான சிகிச்சையை முன்கூட்டியே தொடங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.