மேட்டூர் : சிறுத்தையை சுட்டுக்கொன்றது தொடர்பாக10 பேருக்கு சம்மன்

82பார்த்தது
மேட்டூர் : சிறுத்தையை சுட்டுக்கொன்றது தொடர்பாக10 பேருக்கு சம்மன்
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தின்னப்பட்டி ஊராட்சி வெள்ளக்காரட்டூர் கிராமத்தில் கடந்த மாதம் சிறுத்தை பதுங்கி அட்டகாசம் செய்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 24-ந் தேதி கருங்கரடு என்ற பகுதியில் இந்த சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிறுத்தை துப்பாக்கியால் சுட்டு கொன்றது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அதேபகுதியை சேர்ந்த முனுசாமி, சசி, ராஜன் ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி