பாமக தலைவர் அன்புமணிக்கு விஜய் திடீர் போன் கால்

58பார்த்தது
பாமக தலைவர் அன்புமணிக்கு விஜய் திடீர் போன் கால்
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரும், நடிகருமான விஜய் இன்று தொலைபேசி வாயிலாக அன்புமணி ராமதாஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அழைப்பின்போது நடைபெறவுள்ள தவெக மாநாட்டிற்கு அன்புமணி ராமதாஸ் விஜய்யிடம் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக நடந்த இந்த உரையாடல் சுமார் 5 நிமிடங்களுக்கு நீடித்துள்ளது. கடந்த மாதம் திருமாவளவனுக்கு போனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், தற்போது அன்புமணியையும் வாழ்த்தியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி