அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

57பார்த்தது
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் மேட்டூர் தொகுதிக்குட்பட்ட ஓலைப்பட்டி ஊராட்சி சிந்தாமணியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் விரிவான ஆய்வு மேற்கொண்டு பயன்பாடு இல்லாத கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்வது அல்லது இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி