மேட்டூர்: அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் பணி

66பார்த்தது
மேட்டூர்: அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் பணி
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டு தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: - தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2024-2025-ம் ஆண்டில் மொத்தம் 30 லட்சம் மீன்குஞ்சுகள் ரூ. 81 லட்சம் செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயை கணிசமாக அதிகரித்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு மற்றும் இந்திய பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 2 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு அவை மேட்டூர் அணை முனியப்பன் கோவில் அருகில் உள்ள ஆற்றில் விடப்பட்டுள்ளன.

இதன்மூலம், அழிந்து வரும் நிலையிலுள்ள மீன்களை பேணி பாதுகாத்து அதனை உற்பத்தி செய்து அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பாக அமைகிறது. இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி