ராமநாதபுரம்: மது பாட்டிலுக்கு அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு- வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் செயல்பட்டு வரும் 6869 எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தமிழ்நாடு முழுவதும் இந்த நிலை இருக்கிறது. எனவும் எங்களுக்கு சம்பளம் குறைவு. மேலும், கூடுதலாக வாங்கும் பணத்தில் அனைத்து அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு என ஊழியர் தெரிவிக்கிறார். இச்செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.