திருவாடானை முத்து மாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பிடாரி கோவில் தெரு முன்பு அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பூத்தட்டு உற்சவர் விழா விமர்சையாக நடைபெற்றது இவ்விழாவானது கடந்த ஒன்பதாம் தேதி புதன்கிழமை காப்பு கட்டுகளுடன் திருவிழா துவங்கி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கும்மி கொட்டி வழிபட்டனர். திருவிழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து பெண் பக்தர்கள் விரதம் இருந்து பூத்தட்டு எடுத்து வான வேடிக்கைகளுடன், மேல தாளங்கள் முழங்க, இளைஞர்கள் ஆரவாரத்துடன் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்