ராமநாதபுரம் மாவட்டம் அஞ்சு கோட்டை ஊராட்சியில் நடந்த சிரம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அடிப்படை வசதிகளான மின்சார வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை என கூறி பொது மக்கள் தரப்பில் கேள்வி எழுப்பினார்கள். உரிய பதில் இல்லாததால சல சலப்பு ஏற்ப்பட்டது. கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த அதிகாரி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அருணகிரி அடிப்படை வசதிகள் செய்து தர உறுதியளித்தார். கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதே போல் திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் இலக்கிய தலைமையில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படும் இடையில் அதற்கு சிறப்பு கிராம கூட்டம் நடந்து வருகிறது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர் சிறப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு திருவாடானை மின்சார வாரிய அலுவலகத்தை கண்டித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என குற்றச்சாட்டு. இந்த கிராம சபை கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள அதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.