கடல்பாசி வளர்ப்பில் மீனவ பெண்கள் ஆர்வம்
கடல்பாசி வளர்ப்பில் மீனவ பெண்கள் ஆர்வம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஏராளமான மீனவர்கள் செயற்கை முறையில் கடல் பாசி வளர்த்து வருவாய் ஈட்டுகின்றனர். கடலில் கயிறு மற்றும் மூங்கில் மிதவைகள் மூலம் கடற்பாசி வளர்க்கப்பட்டு வருகிறது. 50 முதல் 60 நாட்களுக்குள் அறுவடை செய்து வெயிலில் காய வைத்து வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து மீனவ பெண்கள் வருவாய் ஈட்டுகின்றனர். கடற்பாசி ஊட்டச்சத்துள்ள உணவாக மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பயன்படுகிறது.