ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் கிராமம் உள்ளது இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என்றும், அதில் 18 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ள 18 குடும்பத்தாரில் ஒரு குடும்பத்தார் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருப்பதாக கூறி இன்று அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தலைமையில் பத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கும்பலாக சேர்ந்து ரூபி என்பவருடைய வீட்டினை அடித்து நொறுக்கியும், வீட்டின் முன்பு இருந்த தென்னை மரம், மா மரம், வேப்பமரம் உள்ளிட்ட விலை மெஷின் வைத்து அறுத்தும் தடுக்க வந்தவர்களை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில காயம் பட்ட ரூபி, துர்கா, மரியசெல்வம் மூவரும் திருவாடனை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ள நிலையில், தொண்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகின்றது. இது பற்றி விசாரித்த போது இதே ஊரில் உள்ள சர்ச்சிற்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறிக கிராம மக்கள் சார்பில் திருவாடானை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது என்றும், அந்த சிவில் வழக்கில் இடம் பிரச்சனை சம்பந்தமாக கமிஷனர் நியமனம் செய்து அளவீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது