தொண்டி பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் மீது தாக்குதல்

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் 7வது வார்டு கவுன்சிலராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காத்தார் ராஜா இருந்து வருகிறார். இவருடன் சில கவுன்சிலர்கள் ஏற்கனவே நடந்த மன்ற கூட்டத்தில் தங்களது எந்த தீர்மானங்களையும் பேரூராட்சி மன்றம் நிறைவேற்றப்படுவதில்லை  என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், எந்த நடவடிக்கையும் மன்றம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
 இதனால் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடந்த மாத கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் காத்தார் ராஜா, 9வது வார்டு திமுக கவுன்சிலர் மஹ்ஜபின் சல்மா,   14வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் பானு , 15 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
    
இந்த நிலையில் கவுன்சிலர் ராஜா நடை பயிற்சிக்கு சென்றபோது பேரூராட்சி துணைச் சேர்மன் அழகு ராணியின் கணவர் ராஜேந்திரன் பத்துக்கு மேற்பட்டோருடன் கும்பலாக சென்று கவுன்சிலர் ராஜாவை வழிமறித்து கையில் வைத்திருந்த சாவி, மற்றும் சிறு ஆயுதங்களை வைத்து சராமரியாக தாக்கினர். இதில் கவுன்சிலர் ராஜாவின் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு  மயங்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி