ராமநாதபுரம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடிப்பங்கு பஞ்சாயத்தில் உள்ள கிராமமான வேளாஙகுடி கிராமம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு தொடர்ந்து அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் வீடுகளை சூழ்ந்துள்ளது மேலும் அதில் அசுத்தங்கள் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். கடந்த பல மணி நேரத்திற்குமேலாக அமர்ந்திருக்கும் நிலையில் அதிகாரிகளோ வேறு எவருமோ என்ன என்று கேட்க கூட வரவில்லை அதனால் மக்கள் விரக்தி அடைந்து சாலை போராட்டங்களை மேற்கொளப் போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர். முற்றுகை போராட்டத்தின் போது திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரெகுலர் BDO கணேசன் அலுவலகத்திற்கு 10. 45 மணிக்கு வந்தவர் காலதாமதமாக வந்ததோடு அல்லாமல் மக்களிடம் என்ன இப்படி நிக்கிறீங்க என்று கூட கேட்காமல் மீண்டும் வெளியில் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.