ஆர். எஸ். மங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் பிரதான நுழைவு வாயில் பகுதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக லேசான மழை பெய்தாலே சேறும் சகதியுமாக மாறி நோயாளிகளும், ஊழியர்களும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். நேற்று முன்தினம் ஆர். எஸ். மங்கலம் பகுதியில் மழை பெய்ததால் பிரதான நுழைவு வாயில் பகுதி சேறும் சகதியுமாக மாறியது.
இதனால் நேற்று சிகிச்சைக்காக வந்த முதியவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நுழைவு வாயில் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தினர்.