அலை சறுக்கு போட்டி: தொடரந்து 9ஆவது முறை சாம்பியன்

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கடலில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு(ஷர்பிங்) போட்டி நடந்தது. இதில் ஸ்டாண்ட் அப் பெடல் படகு போட்டியில் சென்னையை சேர்ந்த தடகள வீரர் சேகர் பட்சை 9--வது முறையாக தேசிய சாம்பியன் பட்டம் வென்றார்.

பிரப்பன்வலசையில் இரு தினங்களாக நடந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து 120 வீரர்கள் பங்கேற்றனர். அலை சறுக்கு போட்டியில் ஸ்பிரின்ட், தொழில் நுட்ப பந்தயம், டிஸ்டன்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். 4 கி.மீ. , தொழில் நுட்ப போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த சேகர் பட்சை, பெண்கள் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த டன்வி ஜெதீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஐ. என். எஸ். , பருந்து கடற்படை தளத்தின் நிலைய கமாண்டர் கேப்டன் அங்கூர் சைகல் பதக்கங்களை வழங்கினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி