திருவடனை - Tiruvadanai

பழுதடைந்த நூலகம்: மன வருத்தத்தில் வாசகர்கள்.!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் கிளை நூலகம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. நூலகம் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதால் வாசவர்கள் படிக்கும் பொழுது மேலிருந்து கற்கள் கீழே விழுவதாக சொல்லப்படுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் குறைந்து காணப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் ஒழுவதாகவும் வெயில் காலங்களில் விரிசல் அடைவதாகவும் வாசவர்கள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் நூலகத்தை பராமரிக்கக் கூடியவர் காலையில் நூலகத்தை திறந்து வைத்து விட்டு சென்று விடுவதாகவும் மாலை நேரங்களில் வந்து அடைத்து செல்வதாகவும் தெரிவிப்பதோடு காலை மாலைக்கு இடைப்பட்ட நேரங்களில் நூலகத்தை பராமரிப்பவர் வருவது கூட அச்சம் ஏற்படும் நிலைதான் இக்கட்டிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கையை கையாண்டு வருவதாக வாசிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். புத்தகம் வாசிப்பதினால் மன நிம்மதி மன அமைதி கிடைக்கும் என்று நூலகம் வந்தால் இங்கும் மன உளைச்சல் ஏற்படுவதாக தெரிவிப்பதோடு மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நூலக கட்டிடத்தை முறையாக பராமரித்து அதனை சரி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Sep 16, 2024, 05:09 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

பாம்பன் புதிய ரயில் பாலம் மின் ஒளிவிளக்கால் ஜொலிக்கும் அழகு!

Sep 16, 2024, 05:09 IST
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக்கூடிய பழைய ரயில்வே தூக்கு பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேல் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு தொழில்நுட்பக் கோளாறால் மண்டபம் ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டு புதிய ரயில்வே தானியங்கி பாலம் பணிகள் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது முழுமையாக முடிந்து வந்த நிலையில் ரயில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆய்வு பணிகள் நிறைவடைந்தன இந்நிலையில் அக்டோபர் மாதம் 2ம் தேதி திறக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திறப்பு விழா காத்திருக்கும் ரயில்வே புதிய தானியங்கி தூக்குப்பாலம் மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்டு ஒளிரும் தானியங்கி தூக்கு பாலத்தை அவ்வழியாக ரோடு பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.