திருவடனை - Tiruvadanai

ராமநாதபுரம்: பெண் துடிதுடித்து பலி (VIDEO)

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜான்சிராணி இவருக்கு ஆறுமுகம் என்ற கணவரும், 9 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜான்சிராணி இன்று அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பு பசுமாட்டினை அவிழ்க்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜான்சிராணி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தொண்டி காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்சிராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மின்சார கம்பிகள் சேதமடைந்து பல நாட்களாக தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி பலியானதால் குடும்பத்தாரும், கிராமத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வீடியோஸ்


இராமநாதபுரம்
Feb 22, 2025, 02:02 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

இராமேஸ்வரம்திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா 4ம் திருவிழா

Feb 22, 2025, 02:02 IST
இராமேஸ்வரம் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா 4ம் திருவிழாவான இன்று இராமநாதசுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும் அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா. இராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆடி திருக்கல்யாணம், மாசி மகா சிவராத்திரி முக்கிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மகா சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 18ம் தேதி சுவாமி சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு 4ம் திருவிழாவான இரவு 8 மணிக்கு நாயகர் வாசலில் ஒளி வழிபாடு முடிந்து அருள்மிகு இராமநாதசுவாமி வெள்ளி கைலாச வாகனத்திலும் அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நான்கு ரத வீதியில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்