திருவடனை - Tiruvadanai

திருவாடனை: எஸ்.பி அலுவலகம் கீழ் தளத்தில் இயக்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆயிரம் வைசிய தனியார் மஹாலில் டிசம்பர் 3 இயக்கத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம் அதன் ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமையில் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் ராவுத்தர் மைதீன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் மாநில அவை தலைவர் வேலாயுதம், மாவட்ட செயலாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் ரமேஷ்பாபு, மாவட்ட துணை தலைவர் ஜெயராணி, மகளிர் அணி தலைவி பாகம்பரியாள், மாநில துணை செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட இணை செயலாளர் ராஜேஸ்வரி உட்பட உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் உள்ளாட்சி தேர்தலில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்பட வேண்டும், வேலைவாய்ப்பில் நான்கு சதவீதம் அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தை கீழ்தளத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலத்தை கீழ்தளத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை 1500 ரூபாயை பத்தாம் தேதிக்குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கம் நடைபெற்றது.

வீடியோஸ்


இராமநாதபுரம்