இபிஎஸ் முதலில் அதிமுகவை காப்பாற்றட்டும்: முத்தரசன்

57பார்த்தது
இபிஎஸ் முதலில் அதிமுகவை காப்பாற்றட்டும்: முத்தரசன்
திமுக கூட்டணியில் தற்போதே புகைச்சல் ஆரம்பித்துவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, அவ்வாறு எவ்விதமாக புகைச்சலும் இல்லை எனவும், முதலில் எரிந்துகொண்டிருக்கும் அதிமுகவை அணைக்கும் வழியை இபிஎஸ் பார்க்க வேண்டும் என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திமுக கூட்டணியை பற்றி அதிமுக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இபிஎஸ்-ன் எண்ணம் பலிக்காது எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி