திருவாடானையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் முதல் மாநாட்டிற்கு வரவேற்க ஒட்டப்பட்டு இருந்த பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.
அதனால் செல்ல சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை பேருந்து நிலையத்தின் சுவற்றில் வெற்றிகழகத்தின் முதல் மாநாட்டு அழைப்பு விடுத்து மிகப்பெரிய பேனர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் பேனரை இரண்டு மூன்றாக கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சியுற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அவரது கட்சி தலைமையுடன் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவ ல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளத சம்பந்தமாகவும் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த சுவற்றில் பல்வேறு கட்சி பேனர்களும் ஒட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தமிழக வெற்றி கழக பேனர் மட்டும் கிழிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது