தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர் போராட்டம்

61பார்த்தது
திருவாடானை கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் மூன்றாம் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் செல்வநாதன் தலைமையில் தொடர் போராட்டத்தை நடத்தினர்
    இதில் ரேஷன் கடை ஊழியலுக்கு அபராதம் இரட்டிப்பாக விரிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். தேவையற்ற பொருட்களை குறியீடு செய்து விற்பனை செய்ய கட்டாயப்படுத்துவது நீக்கப்பட வேண்டும், 12 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும் பணியாளர்களை அதற்குள் உட்பட்ட ரேசன் கடைகளில் பணி நியமனம் செய்ய வேண்டும் என மூன்று அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள், பெண் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் போராட்டங்களை கையில் எடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி