புனித ஜெரார்டு மதெல்லா ஆலய திருப்பலி மற்றும் சப்பர பவனி

68பார்த்தது
அஞ்சுகோட்டையில் புனித ஜெரார்டு மதெல்லா ஆலய திருப்பலி மற்றும் சப்பர பவனி நடந்தது

      ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சு கோட்டையில உள்ள புனித ஜெரார்டு மதெல்லா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு சப்பர பவனி மற்றும் திருப்பலி வானது கடந்த அக் - 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. கடைசி நாளான இன்று புனித ஜெராடு மஜெல்லா சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் தோழில் சுமந்து ஓரியூர் விலக்கு சாலை சுற்றி வீதி உலா வரும் சப்பர பவனி நடை பெற்றது. அதற்கு முன்னதாக இறையாளர்கள் சிறப்பு திருப்பலியை செய்து வைத்தனர். சப்பர பவனியின் போது இறைமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீதி உலா வந்தார்கள். இந்த விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறை அப்பம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி