திருமயம்
சாலை விபத்தில் ஆயுதப்படை காவலர் பலி
புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருபவர் அந்தோணி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகம் மீது மினி லாரி மோதிதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.