UPI மூலம் பணம் செலுத்தும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். UPI PIN நம்பரை யாருடனும் பகிர வேண்டாம், இதனால் மோசடிக்கு ஆளாக நேரிடலாம். UPI செயலியை எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளவும். பணம் செலுத்துவதற்கு முன், யுபிஐ கணக்கு விபரம், அனுப்பப்படும் தொகை போன்ற பரிவர்த்தனை விவரங்களைக் கவனமாகப் படித்து, சரியான தொகையை சரியான நபருக்குச் செலுத்துகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.