முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் மாற்றங்கள் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் ஒழுங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக 2026 சட்டமன்ற தேர்தல் பற்றி ஆலோசனை நடத்திய நிலையில், முதல்வர் தாயகம் திரும்பியதும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை திமுக ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.