தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பேரவை கூட்டம் சென்னையில் இன்று (செப்., 8) நடைபெற்றது. பின்னர் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி அளித்த பேட்டியில், “நடிகர் சங்க கடனை அடைக்க நடத்தப்பட உள்ள கலை நிகழ்ச்சியில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நாடகத்தில் நடிப்பதாக உறுதி அளித்துள்ளனர். நடிகர் சங்கத்திற்கு வைப்பு நிதி வைக்க நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ரூ.1 கோடி கொடுத்தார்.” என்றார்.