அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா
பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.. பெரம்பலூரில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை துவக்க விழா நடைபெற்றது. அதன் மாநில பொருளாளர் கோமளா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் அகில இந்திய அமைப்பு செயலாளர் வேலுசாமி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய கிளையை துவக்கி வைத்து பேசினர். விழாவில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெறும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியமாக ரூபாய் 9000 வழங்கிட வேண்டும், ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவித்திட வேண்டும் மற்றும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன. விழாவில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தோழமை அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.