எதிர்ப்புகளுக்கு பணிந்த LIC நிறுவனம்
இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்புப் பக்கமானது ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் அதன் இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. இதனால் அந்த மொழி தெரியாதவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுந்த கண்டனங்களையடுத்து மீண்டும் இணையதளப் பக்கம் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.