
சுரங்கப்பாதையில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணி தீவிரம்
தெலங்கானா மாநிலத்தின் ஸ்ரீசைலத்தில் அணைக்கட்டு சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கப்பாதையின் 13ஆவது கிலோ மீட்டரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, அணையில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவை சரிசெய்ய நேற்று (பிப்.,22) மாலை தொழிலாளர்கள் 8 பேர் சுரங்கத்திற்குள் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.