தென்காசி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக டேவிட் மைக்கேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தனது பள்ளியில் பயிலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து மருத்துவ விடுப்பில் சென்றிருந்த மைக்கேலை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் பதுங்கி இருந்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.