சென்னை விமான நிலையத்தில் பாஜக மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கை. முதலமைச்சர் குடும்ப பிள்ளைகள் 3ஆம் மொழியை கற்கவில்லையா?. ஏழை எளிய மாணவர்களுக்கான வாய்ப்பை திமுக அரசு தடுக்கிறது. இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்தவில்லை. தமிழகத்திற்கான நிதி கிடைக்காமல் இருக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் தான் காரணம்.