ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் "குட் பேட் அக்லி". மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வரும் ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று 7:03 மணிக்கு படத்தின் அப்டேட் ஒன்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெரும்பாலும் படத்தின் டீசர் அப்டேட்டாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.