மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வந்திருந்த மாமியார் மற்றும் மருமகள் இடையே வாய்த் தகராறு எழுந்துள்ளது. வாய்த் தகராறு முற்றி சண்டை ஆரம்பித்தது. இதில் பெண்கள் கூட்டமும் ஆண்கள் கூட்டமும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மாமியாரும் மருமகளும் ஒருவரின் தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொண்டு கட்டி உருண்டனர். பின்னர் போலீசார் வந்து சண்டையை தடுத்தனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.