மதுரை: அது எந்த நொடி.? சீமான் கேள்வி

81பார்த்தது
பழனி செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று (பிப். 22) மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: அண்ணாமலை சொல்லும்போது 53,000 அரசு பள்ளிக்கூடங்கள் தவிர அனைத்திலும் ஹிந்தி உள்ளது. 

தனியார் பள்ளிகளில் ஹிந்தி உள்ளது என்றால் அதை அனுமதி கொடுத்தது யார் என்று கேள்வி எழுகிறது. திமுக தற்போது தேர்தல் வரும்போது இந்தியை எதிர்க்கிறோம் என சொல்வது தமிழ் மீது பற்று உள்ளது போல் காட்டிக் கொள்வதற்காகத்தான்.

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அதிகார மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தொடர்புடைய செய்தி