தமிழனின் குணத்தை காட்ட வேண்டி வரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், “நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி படிக்க விரும்புகிறவர்கள் இந்தி பிரசார சபாவிலோ.. கே.வி பள்ளிகளிலோ படிப்பதைத் தமிழ்நாடு தடுத்தது இல்லை. தடுக்கவும் போவதில்லை. ஆனால், திணித்தால் 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பதனைக் காட்ட வேண்டி வரும்” என்று கூறியுள்ளார்.