ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று(பிப்.22) பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் தேசிய கீதத்திற்கு பதிலாக இந்திய தேசிய கீதம் தவறுதலாக ஒலிக்கப்பட்டது. உடனடியாக அதை நிறுத்தி ஆஸ்திரேலியாவின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.