திருப்பூர்: சொத்துத் தகராறில் பெரியப்பாவை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்குமூட்டையில் கட்டி குளத்தில் வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவிநாசி அடுத்த கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமியை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இதுகுறித்து அவரது மகன் போலீசில் புகாரளித்தார். பின் நடத்தப்பட்ட விசாரணையில் கோவிந்தசாமியின் தம்பி மகனான ரமேஷ் என்பவருக்கும், அவரது சகோதரிக்கும் சொத்துப் பிரச்னை இருந்ததும், அதை தீர்த்து வைக்க மறுத்த பெரியப்பாவை கொலை செய்ததும் தெரிந்தது.