தமிழகம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்குவங்கம் மாநிலம் ஜல்பாய்குரி - சென்னை சென்டிரல் இடையே இயக்கப்படும் இந்த ரயிலானது ஒடிசாவின் சபீரா ரயில் நிலையம் அருகே வந்தபோது தடம்புரண்டு மின்கம்பத்தில் மோதி நின்றுள்ளது. இந்த விபத்தில் எந்த உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. முன்னதாக 2023-ல் பாலசோரில் நடந்த கோர ரயில் விபத்தில் 296 பேர் கொல்லப்பட்டனர்.