உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 40 வயதான பெண்ணை பஞ்சாயத்து தலைவர் ஒரு மாதத்துக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வரும் பெண் அண்மையில் இது தொடர்பாக போலீசில் விரிவாக புகார் கொடுத்தார். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் பஞ்சாயத்து தலைவரான ராகுல் பஸ்வான் என்பவரை நேற்று (பிப். 21) கைது செய்து சிறையில் அடைத்தனர்.