ஹைதராபாத்: மேட்சல் மாவட்டத்தில் உள்ள குஷைகுடா காவல் நிலைய எல்லைக்குள் பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து இளைஞர் ஒருவர் தனது தந்தையை சரமாரியாக குத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செகந்திராபாத், லாலாபேட்டாவைச் சேர்ந்த ஆர்.எல். மொகிலி என்ற நபரை அவரது மகன் சாய்குமார் கத்தியால் குத்தியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொகிலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.