ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. பிரத்யேக எஸ்.இ ரக மாடல்களை புறந்தள்ளிவிட்டு, புதிதாக ‘e’ என்ற வரிசையை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. மொத்தமாக மூன்று வகைகளில் ஆப்பிள் ஐபோன் 16இ போன்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி என்ற ஸ்டோரேஜ் வகைகளில் கிடைக்கும் இந்த போனின் விலைகள் முறையே ரூ.59,900, ரூ.69,990, ரூ.89,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.