நகை பாலிஷ் போடுவதாக பீகார் மாநில இளைஞர்கள் மோசடி

60பார்த்தது
நகை பாலிஷ் போடுவதாக பீகார் மாநில இளைஞர்கள் மோசடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆரூரில், வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி ராயல் பிளேட் பவுடரை பயன்படுத்தி இரண்டு பவுன் சங்கிலியில் இருந்து சிறு பகுதியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நகை துண்டாக உடைந்துள்ளது. இது குறித்து சரியான பதில் அளிக்காத இரண்டு இளைஞர்களையும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து வைத்துள்ள கிராம மக்கள் சங்கராபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி