பிள்ளையாருக்கு எப்படி அருகம்புல்லோ, அதேபோல், சிவபெருமானுக்கு வில்வ இலை. தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் பல உன்னதங்களை தந்தருளும். ஆன்மீகத்தில், மகாலட்சுமி வில்வ மரத்தில் நித்யவாசம் செய்வதாக வொல்லப்பட்டுள்ளது. எனவே, "யார் வீட்டில் சாஸ்திரங்களில் சொன்னபடி நியமத்துடன் வில்வ மரத்தை வளர்க்கிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி நித்ய வாசம் செய்வாள்'' என்பது ஐதீகம்.