மகாராஷ்டிரா: ஜாப்ராபாத்தில் உயிருடன் புதைந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று (பிப்.22) காலை தூங்கிக் கொண்டிருந்தனர். இதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின் மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.