மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் "தக் லைஃப்" படத்தில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனிடம் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "இந்த படம் பார்த்தாலும் அவர் நல்லவரா கெட்டவரா என்பதற்கு பதில் கிடைக்காது. அக்கதாபாத்திரம் நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான்" என்று சுவாரஸ்யமான பதிலளித்துள்ளார்.