

கஞ்சனூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் இவருக்குச் சொந்தமான 11 ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவைத்திருந்தார். இன்று அதிகாலை ஆடுகளில் சத்தம் கேட்டு அவரது மனைவி முனியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து ஆடுகள் படுகாயமடைந்திருந்தன. சில ஆடுகள் உயிரிழந்துக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.